வக்கிராசூரன்
என்னும் அரக்கன் தனது தவ
வலிமையால்
கொடுமைகள்
பல செய்து வந்தான். அவனது
கொட்டத்தை
அடக்க வேண்டி தேவர்கள் சிவனிடம்
முறையிட்டனர்.
சிவபெருமான்
வைகுண்ட வாசனான மகாவிஷ்ணுவை
அழைத்து
வக்கிரா சூரனை வதம் செய்யும்படி
கூற, அவரும்
சூரனுடன்
போரிட்டு தனது சக்கரத்தை வக்கிராசூரன்
மீது
பிரயோகம்
செய்து அவனை அழித்தார்
வக்கிராசூரன்
தங்கையான துன்முகியும் தன் அண்ணனை
போலவே கொடுஞ்செயல் புரிந்து வந்தாள்.
அரக்கியான
அவளை வதம் செய்ய சிவபெருமான்
பார்வதியிடம்
கூற, பார்வதி தேவியும் துன்முகியை
வதம் செய்ய முயன்றாள்.
ஆனால் துன்முகி அப்போது கருவுற்றிருந்தாள்.
சாஸ்திர
முறைப்படி, கர்ப்பிணியையோ அல்லது சிசுவையோ
வதம் செய்யக்கூடாது என்பதால் அகிலாண்டநாயகியான
பார்வதிதேவி
துன்முகியின் வயிற்றை கிழித்து அவள்
வயிற்றில்
இருந்த
சிசுவை தனது வலது காதில்
குண்டலமாக அணிந்து
கொண்டு
அரக்கியான துன்முகியை வதம் செய்தார். வக்கிராசூரனின்
தங்கையை வதம் செய்து அழித்ததால்,அன்னை, வக்கிர
காளியம்மனாக
அவ்விடத்திலேயே அமர்ந்து பக்தர்களுக்கு
அருள் பாலிக்கிறார் என்பது இக்கோவிலின் வரலாறு.
ஆதி சங்கரர் இத்தலத்திற்கு வந்தபொழுது
ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை
இக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்
பொதுவாக
காளி கோயில் ஊரின் எல்லையில்தான்
இருக்கும்.
ஆனால் இங்கு ஊரின் நடுவில்
ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே
அமைந்துள்ளது.வக்கிரகாளியின் திருவுருவம் சாந்த சொரூபமாக உள்ளது.
ஆகம விதிப்படி அமைக்கப்படாத கோவில்
.
மூலவர்
என சொல்லப்படும் கோவிலின் சாமி சிலைக்கு எதிரில்
நந்தி அமைப்பது ஒரு ஆகம விதி.
ஆனால்………. இங்குள்ள
கோவிலில்
நந்தி திரும்பி கொண்டிருக்கும். எல்லா கோவில்களிலும்
இடம் வலமாய் சுற்றி வந்தால்
இங்கு மாறி சுற்ற வேண்டி
வரும்.
திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை
நாட்டுத்தலங்களில்
இது 30வது தலம்.
ஆதிச்ச
சோழனால் கட்டப்பட்டு, ஞானசம்பந்தரால் பாடப்பட்டது
இத்தலம்
ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை
காளி என்பதால் வலது
புறம்
5 இடப்புறம் 4 என்ற கணக்கின் படி
சுற்றிவர வேண்டும் என்பது
ஐதீகம்.
வக்ரகாளியம்மன்:
வக்கிரகாளி சந்நிதியினால்தான் இத்திருத்தலம்
தற்போது
பலருக்கும் தெரிந்திருக்கிறது. இத்தலம் புகழ் பெறக்
காரணமே
இந்த வக்ரகாளியம்மனே ஆகும். வக்ர சாந்தி
திருத்தலம்
என்று இத்தலத்திற்கு பெயர். பட்டீசுவரம் துர்க்கை,
சிதம்பரம் பிரம்ம சாமுண்டீசுவரி, தில்லை
காளி போன்ற அற்புதமான சிற்பங்களைப்
போலவே வக்கிரகாளி அம்மனின் திருவுருவமும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது
பவுர்ணமி
இரவு 12 மணிக்கும், அமாவாசையில் பகல் 12 மணிக்கும்
இங்கு காட்டப்படும் ஜோதி தரிசனம் நிகழ்ச்சி
மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த ஜோதி தரிசனத்தைக் காண
தமிழகம்-புதுவை மற்றும் பிற
மாநிலங்களில் இருந்தும் ஏராளாமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகிறார்கள்.
நீண்ட நாட்களாக திருமணம்
ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில்
உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம்
பழ தீபம் ஏற்றுவது வழக்கம்.
எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில்
கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்
.
-
0 comments:
Post a Comment