நான் சென்று வந்த சிவாலயங்களின் அமைவிடங்கள், செல்லும் வழித்தடங்கள், இறைவனின் திருப்பெயர்கள், தல வரலாறு முதலிய விவரங்கள்- மற்றவருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வலைப்பதிவு

Wednesday, September 3, 2014

ஷிப்ரா ஆறு - உஜ்ஜைனி
































ஷிப்ரா நதி, புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது
என்று அக்கினி புராணம் குறிக்கிறது. இந்த நதியில் மூழ்கி
மகாகாளரை வணங்கி, காளி தரிசனம் செய்தால், கல்வியும்
அறிவும் பெருகும், அசுர குணம் மறையும் என்பது
அனுபவித்தவர்களின் உண்மை.
சூரபத்மனை அழிக்க சிவபெருமான், முருகப் பெருமானை
அனுப்பியபோது அவருக்கு சக்தி மிக்க வேல் எனும்
ஆயுதத்தை பார்வதி தேவியார் இந்த ஷிப்ரா நதிக்கரைக்கு
வந்து அங்கு ஒர் ஆலமரத்தை வளரச் செய்து 
சிவபெருமானை நோக்கி தவம் செய்தப் பின் முருகனுக்குக்
கொடுத்தாளாம். இங்குள்ள நதிக் கரையில் ஆல
மரத்தடியின் கீழ் சிவபெருமான் சப்த மாத்ருக்களுடன்
சேர்ந்து ஸ்தாபிக்கப்பட்டு பார்வதியினால் பூஜிக்கப்பட்டு
இருக்கிறார் என்பதினால் அந்த சிவலிங்கமும் சக்தி
வாய்ந்தது என்கிறார்கள்.
அக்கினித் தீர்த்தமெனும் புனித ஷிப்ரா நதியை மிகவும்
தூய்மையான முறையில் வைத்துள்ளார்கள்.
இங்கே இராமாயண காலத்தில் இராமர் வந்து நீராடியதால்,
ராமர் காட் என்னும் குளியல் கட்டம்  ஏற்பட்டு உள்ளது.
இங்கே மீன்களை கடவுளாக வழிபடுகின்றனர்.








0 comments:

Post a Comment