திருத்தலங்கள்
. . .
திருத்தலங்கள்
புராதானக் கோயில்களின்
முக்கியத்துவத்தையும்- அதை நாம்
காக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் “ கோயில்கள் “
என்ற தலைப்பில்
கடந்த பதிவில் யாம் குறிப்பிட்டிருந்ததை
கண்டிருப்பீர்கள்.
புராதனக் கோயில்களை
நாம் தொடர்ந்து தரிசித்து வருவதால்
கோயிலின் பெருமைகள்
உலகம் அறிய வரும், பக்தர்களின்
எண்ணிக்கை கூடுவர்,
.மத நல்லிணக்கம் உண்டாகும்,
தொடர் தெய்வ வழிபாட்டினால்,.
நாட்டில் பாவச்
செயல்கள் குறைந்து, மக்கள் மன வலிமை
மிகுந்து குண வலிமை
பெறுவர். நாடு வளம் பெறும்.
எண்ணற்ற பல கோயில்கள்
நம் பாரத நாட்டில் இருந்தாலும்
நம் தாய்த் திருநாடான
தமிழ்நாட்டில் உள்ள சிறப்பைப்
போன்று வேறு எங்கும்
இல்லை.
இது, ஒவ்வொரு கட்டிடக்கலைஞனின்
கைவண்ணத்திலும்,
சிற்ப கலையினாலும்,
ஓவியக்கலையினாலும், இன்னும்
பலப்பல நுண்ணிய
கைவண்ணத்தினாலும் நம் கோயில்களின்
மேல் உள்ள ஈடுபாட்டை
நாம் கவனப்படுத்திக் கொள்ளலாம்.
பலக் கோயில்கள்
புராதானச் சிறப்பு பெற்று இருந்தாலும்
நால்வர் பாடிய
276 கோயில்களே மிகச் சிறப்புப் பெற்று
“ பாடல் பெற்ற
ஸ்தலங்கள் “ என்ற பெருமையுடன்
அழைக்கப் படுகின்றன.
இத்திருத்தலங்களைப்
பற்றிய விபரங்களை பலர்,
பல நூல்களில்,
பல காலங்களில் எழுதியிருந்தாலும் கூட
தற்பொழுதுள்ள விபரங்களை
மிகத் தெளிவாக திரட்டி
பக்தர்களுக்கு
ஒரு சிறந்த வழி காட்டி நூலாக, மிகவும்
பயணுள்ள நூலாக,
கொடுத்து ஆன்மீகம் செழிக்க உதவி
புரிந்துள்ளார்
சிவனடியார் திரு சாய்குமார் அவர்கள்.
இத்திருத்தலங்களை தரிசிக்க , அத்திருக்கோயினுள்
உறையும் எம்பெருமானின்
பெருமைகளையும்,
தல விபரம், பயண
தூரம், பாதை, நடை திறந்திருக்கும்
நேரம், தொடர்பு
கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,
என்று பல விபரங்களை,
தன்னுடைய கடின உழைப்பாலும்
இடைவிடா முயற்சியாலும்
திரட்டி தந்துள்ளார் திரு.சாய்குமார்
அவர்கள். அவர்
எடுத்திருக்கும் இப்பெரும் முயற்சி-
இவ்வழிகாட்டியைக்
கொண்டு நாம் பல திருத்தலங்களுக்கும்
எவ்வித சிரமுமின்றி
சுலபமாக சென்று அத்தல இறைவனை
தரிசித்து வரலாம்
என்ற நம்பிக்கை கொள்ளலாம்.
அடியார்கள் இப்புத்தகத்தை
பெற கீழ்காணும் முகவரியில்
தொடர்பு கொள்ளலாம்.;-
கே. சாய்குமார்
16/28, II மெயின்
ரோடு
ஜெய் நகர், அரும்பாக்கம்,
சென்னை- 600
106
செல்- 93828
72358, 044-24757212
website ;
www.sivavishnutemplesguide.com
நன்னிலத்தை சேர்ந்த
சிவத்திரு. டி. வெங்கடேசன் ஐயா என்பரும்
திருத்தல வழிகாட்டி
என்ற புத்தகத்தை தன் கழக சார்பாக
வெளியுட்டுள்ளார்கள்.
விலாசம் ;
திரு. வெங்கடேசன்.
தலைவர்,
ஸ்ரீ மதுவனேஸ்வர
சுவாமி
வார வழிபாட்டுக்
கழகம்.
85/34, கடைத்தெரு
நன்னிலம்
தமிழ் நாடு-610
105
போன்
04366-230455
0 comments:
Post a Comment