ச்சார் தாம் கோயில்
ஸ்ரீ ச்சார் தாம் மந்திர்
சார் தாம் மந்திர்
ஹிந்துக்களாகப்
பிறந்தவர்கள் தங்களின் வாழ்க்கையில்
ஒருமுறையாவது
துவாரகா, பத்ரிநாத், ஜகன்னாத் பூரி
மற்றும்
ராமேஸ்வரம் என்ற நான்கு
முக்கியமான
ஆலயங்களுக்குச்
சென்று அங்குள்ள தெய்வங்களை
தரிசனம்
செய்துவிட்டு வர வேண்டும் என்று
ஆதி சங்கரர்
அறிவுறுத்தி
உள்ளதாக கூறப்படுவதுண்டு.
அதற்குக் காரணம் நான்கு திசைகளில்,
வடக்கு, கிழக்கு,
மேற்கு
மற்றும் தெற்கு பகுதிகளில்
அமைந்துள்ள
பத்ரிநாத் (விஷ்ணு), பூரி ஜகன்னாத்
(விஷ்ணு
அவதாரம்), த்வாரகா (கிருஷ்ணர் பலராமன் )
மற்றும்
சிவபெருமானின் ராமேஸ்வரம் உள்ள அந்த
நான்கும்
முக்கியத்துவம் வாய்ந்தவை அந்த
நான்கு
இடங்களுக்கும் சென்று
தரிசனம் செய்தால்
முற்பிறப்பில்
செய்த அனைத்து பாபங்களும்
விலகும்,
மறு பிறப்பு இல்லாத நிலையை
அடையலாம்
என்று நம்புகிறார்கள். ஆனால் அனைவராலும் அங்கெல்லாம்
சென்றுவிட்டு
வர முடியாத நிலை உண்டு.
அதற்கு பல்வேறு
காரணங்களும்
இருக்கலாம். ஆகவேதான் அந்த முக்கியமான
நான்கு
ஆலயங்களையும் ஒரே இடத்தில் சென்று
தரிசிக்க
அதே தெய்வ உருவிலான சிலைகளை,
அதே வழிமுறை
கொண்ட பூஜை விதிகளுடன் இந்தியாவின் சில நகரங்களில்
'சார் தாம்' அதாவது
'நான்கு புனித இடங்கள்' என்ற
பெயரில்
வழிபாட்டுத்
தலங்களை ஸ்ரீ அகண்ட ஆஷ்ரம்
சார்ப்பில்
ஸ்ரீ ஸ்வாமி ஸாந்தி ஸ்வரூபானந்த்ஜி
அவர்கள் நிறுவி
உள்ளார்கள். 'சார்
தாம்' என்ற
ஆலயத்தில் சென்று அந்த
நான்கு தெய்வங்களையும் வழிபட்டால்
அந்த நான்கு
இடங்களையும்
தரிசித்த பலன்
கிடைக்கும் என்பது
நம்பிக்கை.

0 comments:
Post a Comment